திருச்சி மாவட்டம் தீராம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் அவரது கணவரின் துணையோடு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக வருவதாகவும், வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என கடந்த மாதம் 5வார்டுகளின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதேபோல் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பிச்சாண்டார் கோவில் மற்றும் தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்தி இருந்தது தெரியவந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததனர்.
இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பிச்சாண்டார்கோவில் ஊராட்சி சோபனா தங்கமணி மற்றும் தீராம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்ரி ஆகியோர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் நிர்வாக ரீதியாக எந்த ஒரு காசோலை எதிலும் கையெழுத்திட தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவார்கள். இதனால் அவர்கள் அரசு பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments