திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின் தொடக்கமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக கல்லூரி வளாகத்தில் உள்விளையாட்டுகளான செஸ், கேரம், இறகுப்பந்து, கைப்பந்து, கோகோ, உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் சிறப்பு விருந்தினராக சிறப்பு ஒலம்பிக்ஸ் தமிழ்நாடு இயக்குநரும் திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வரும் விளையாட்டுக் கல்வித் துறையின் தலைவருமான முனைவர் பிரசன்ன பாலாஜி பங்கேற்றார். உடன் R.C மேனிலைப்பள்ளியின் தாளாளர் அருள்பணி சின்னப்பன் அடிகள் பங்கேற்றார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர் பிரசன்ன பாலாஜி ஒலிம்பிக் ஜோதியை மாணவர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார் அவர்தம் சிறப்புரையில் இளைஞர்களை சரியான வழியில் திசை திருப்பி வாழ்வில் உயர விளையாட்டுத் துறை முதன்மை வகிக்கிறது. உடலையும் மனதையும் சமூகத்தையும் ஒரு சேர வளப்படுத்த விளையாட்டுத் துறை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்வின் இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் திறனை முன்னேறிச் செல்லும் மனவூக்கத்தை இளையோரிடம் வளர்ப்பதில் விளையாட்டு முதன்மைப் பங்காற்றுகிறது என்றார்.
விளையாட்டுகளால் மட்டுமே எல்லைகள் கடந்த உலகை இணைக்கும் வலுவான மானுடச் சங்கிலி என்றார். ஒவ்வொரு தனிமனிதரும் வங்கியில் சேமிக்கும் பணத்தை விடவும் விலைமதிப்பற்ற சொத்தாக உடல்நலத்தைப் பேணிட நாள்தோறும் உடல்நலத்திற்காக விளையாடி உடல்நலம் காக்க வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து அருள்பணி. சின்னப்பன் உரையாற்றினார். தடகளத்தில் வெற்றி பெற்றோர்க்கு பிரசன்ன பாலாஜி பரிசுகள் வழங்கினார். முன்னதாக வரவேற்புரையை கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் இயக்குநர் அருள்பணி S.G.சாமிநாதன் அடிகள் நன்றியுரை ஆற்றினார். 55 புள்ளிகள் பெற்று Red House அணியினர் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையை வென்றனர். 45 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை Yellow House அணிபெற்றது. தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார், இசைத்துறை உதவிப் பேராசிரியர் பிரேம்குமார், நடனத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அபர்ணா பிரித்தா, வீணைத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பானுமதி விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments