திருச்சி மாவட்டத்திற்க்கு மீண்டும் ஆட்சியராக சிவராசு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இறப்பு விகிதத்தை குறைப்பது தான் முதல் பணியாக எடுத்துள்ளோம். மேலும் தினமும் 6 ஆயிரம் பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது . 100 பேருக்கு மாதிரிகளை எடுத்தால் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதனை 10த்திற்க்குள் குறைக்க வேண்டும்.
மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .ஜூன் முதல் வாரத்தில் வல்லுனர்கள் குறிப்பிடுவதுபோல உச்சத்தை எட்டும் என்ற தகவல் அடிப்படையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நோய்தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் .இந்த பரிசோதனையின் மூலம் 24 மணி நேரத்தில் நோயாளியை கண்டறிந்து அவர்களை உடனடியாக பாதுகாத்து உரிய சிகிச்சை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . நாளொன்றுக்கு 2 ஆயிரம் தடுப்பூசிகள் வருகிறது. மேலும் தடுப்பூசிகள் எண்ணிக்கை விரைவில் அதிகப்படுத்தப்படும் என்றார்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான நோய்த்தடுப்பு என்றால் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியில் இருப்பது தான் எனது பொதுமக்களும் இந்த விழிப்புணர்வோடு முகக்கவசங்கள் அணிந்து தனிநபர் இடைவெளியோடு இருந்தால் நோய் அதிகரிப்பை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் குறைவான நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை என்று கூறுவதும் கடைசி நேரத்தில் இறக்கும் தருவாயில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதும், அதிகக் கட்டணம் வசூலிப்பதும் தொடர்பான புகார்கள் வருகிறது. இப்படிப்பட்ட புகார்கள் வந்தால் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments