திருச்சி மாவட்ட வன அலுவலராக பணிபுரிபவர் கிருத்திகா. இவருடைய புகைப்படத்தை ஆட்டோக்காரன் காமெடி என்ற facebook பக்கத்தில் அரசு வாகனத்தோடு நிற்கும் புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு செய்தியை பரப்பியுள்ளனர்.
அரசு வாகனத்துடன் நிற்கும் புகைப்படத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்காமல் கஷ்டப்பட்டு உழைத்து புதிய கார் வாங்கிய எனக்கு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே என்ற வாசகத்தை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்திருப்பதாகவும்,
சைபர் கிரைம் மூலமாக விரைவில் அவதூறாக ஒரு அரசு அதிகாரியின் புகைப்படத்தை பதிவு செய்து அவதூறு செய்தி வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என வன அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments