திருச்சி விமான நிலையத்தில் 1840 கிராம் எடையுள்ள ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
சார்ஜாவிலிருந்து ஏர் இந்திய விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது இரண்டு பயணிகள் 1840 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அதன் மதிப்பு ஒரு கோடியே 13 லட்சம் என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments