மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியின் உடமைகளை சோதனை செய்ததில் 181.00 கிராம் தங்கச் சங்கிலி ஒன்று மறைத்து வைக்கப்பட்டது.
மேலும் பேன்ட் பாக்கெட்டில் 201 கிராம் எடையுள்ள 39 செவ்வக வடிவ மெல்லிய தங்கத் தகடுகள் பழைய ஸ்மார்ட் போன்களில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் தங்கத்தின் எடை 382.00 கிராம். இதன் மொத்த மதிப்பு ரூ. 22.52 லட்சம் ஆகும். மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
378
03 July, 2023










Comments