கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய மண்டலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் நான்கு வழக்குகளும், புதுக்கோட்டையில் ஏழு வழக்குகளும்,
கரூரில் 17 வழக்கும், பெரம்பலூரில் 12 வழக்கும், அரியலூர் மாவட்டத்தில் நான்கு வழக்கும், தஞ்சாவூரில் 11 வழக்கும், திருவாரூரில் 24 வழக்கும், நாகப்பட்டினத்தில் 8 வழக்கும், மயிலாடுதுறையில் 4 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 7 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே சாராயம் விற்றவர்கள் 1265 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments