தந்தை பெரியார் பிறந்த தினமான இன்றைய தினம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையால் சமூகநீதி தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களும் ஒன்றிணைந்து நிற்க, இணை பேராசிரியர் த.அருளானந்து முன்மொழியப்பட்ட உறுதி மொழியினை மாணவர்கள் பின் தொடர்ந்து சொல்லி உறுதிமொழியை மனமார, உளமாற ஏற்றுக் கொண்டனர்.
சமூக நீதிக்கான வரலாற்றின் தேவைகள் என்னென்ன என்பனவற்றை வரலாற்றில் பதியப்பட்ட வரலாற்றுத் தரவுகளையும், நடைமுறை காரியங்களையும் விளக்கிக் கூறி பேராசிரியர் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
மாணவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் சமூக நீதியை கடைப்பிடிப்பேன் என்றும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி நல்ல சமுதாயம் உருவாக பாடுபடுவேன் என்றும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
வரலாற்று துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், துறைத்தலைவர், முனைவர். ஃபெமிலா அலெக்சாண்டர், முனைவர் எலிசபெத், உதவி பேராசிரியர்கள் மனுநீதி, தீபன் ராஜ், சந்தனகுமார், நிறைமதி, மற்றும் ஜஸ்டின் மற்றும் மாணவ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments