Advertisement
திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற (பெல்) BHEL ஊழியர் நந்தகோபால் (81).இவருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடைசி மகன் பிரபோத சந்திரன்(46)மட்டும் திருமணமாகாமல் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
Advertisement
நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் சொத்து தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மகன் பிரபோத சந்திரன் கல்லை எடுத்து தந்தையை கொலை செய்ய முயன்றபோது பின்னால் போய் சுவரில் அவரின் தலை மோதி வீட்டிலேயே உயிரிழந்தார்.
Advertisement
பிறகு பிரபோத சந்திரன் ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்து சரணடைந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments