காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
Advertisement
இந்நிலையில் திருச்சியில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளரும், ஓபிசி திருச்சி மாவட்ட தலைவருமான எல். ரெக்ஸ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பென்னட் அந்தோணிராஜ் ஆகியோர் திருச்சி சிங்காரத்தோப்பு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் உள்ள ஆதரவற்றோர் குடியிருப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு குளிருக்கு இதமாக போர்வைகள் வழங்கப்பட்டது.
Advertisement
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.பி பகதூர்ஷா, மாவட்ட துணை செயலாளர் ஷீலா செலஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், நூர் அஹமத், கிதியோன், வார்டு தலைவர்கள் வினோத், ஈசாக், பிரான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments