Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழ்நாட்டில் விரைவில் கள் – தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பேட்டி.

திருச்சியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது…. கள்ளுக்கு அனுமதி கேட்பதுவும், கள்ளுக்கடைகளை திறக்க கோருவதும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்ற இரண்டும் புரிதல் இன்மையின் வெளிப்பாடு. 1950ல், உணவு தேடும் உரிமையின்படி, கள் இறக்குவதும், பருகுவதற்குமான அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 

தமிழக அரசு கலப்படத்தை காரணம் காட்டி, கள்ளுக்கான அனுமதி உரிமையை பறித்துக் கொண்டது. அண்டை மாநிலங்களில், கள்ளுக்கு தடை இல்லாத நிலையில், தமிழகத்தில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை  

 கள்ளுக்கு தடை விதித்திருப்பதால், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47ல் சொல்லப்பட்டிருக்கும் வரிகள் பயனற்று போகின்றன. அரசியல் அமைப்பு சட்டப்படி கள்ளுக்கு தடையும், கடையும் கூடாது. தமிழக அரசு, கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். 

இதை வலியுறுத்தி வரும் ஜனவரி 21ம் தேதி முதல், தமிழகம் முழவதும் 1,000 கணக்கான இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். தமிழக அரசு, மது விலக்கு சட்டப்படி கள் இறக்குவோர் மீது நடவடிக்கை எடுத்தால், அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குபவர்கள் மீது, மது விலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், எந்த சட்டம் எதற்கு கட்டுப்பட்டது என்பதற்கு அரசால் பதில் சொல்ல முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என குறிப்பிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *