எண்சட்டம் அல்லது அபாகஸ் (Abacus) என்பது, முக்கியமாக ஒருசில ஆசிய நாடுகளில் எண்கணித செயல்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில் இந்த எண்சட்ட கருவியானது செவ்வக வடிவ மரச் சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புகளில் மணிகளைக் கோத்து மணிச்சட்டம் உருவாக்கப்படுகிறது.
அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும் நொடிப்பொழுதில் எளிமையாக முடித்திட முடியும். இதன் மூலம் கணிதம் பிடிக்காதவர்கள் கூட கணிதத்தில் சாதிக்கலாம். சீனர்கள் பெரும்பாலும் கால்குலேட்டர் பயன்படுத்துவதில்லை. மாறாக அபாகஸ் மனக் கணிதத்தின் மூலமாகத்தான் கணக்குகளை செய்கின்றனர். ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை இயந்திரத்தை சார்ந்ததாக மாறிவிட்டது. குழந்தைகளுடைய மூளை செல்கள் சிறப்பாக செயல்பட இந்த அபாகஸ் பயிற்சி தேவைப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு வேதா கிட்ஸ் மற்றும் SIP abacus நிறுவனம் வழங்கும் இலவச அபாகஸ் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர். முன் பதிவு கட்டணம் முற்றிலும் இலவசம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments