வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட உறையூர் பகுதியில் தொடங்கிய இப்பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் புத்தூர் பிஷப் ஹீப்பர் பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி உறையூர் கடைவீதி வழியாக, உறையூர் காவல் நிலையம், மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டிவளாகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள் வழங்கினர். மேலும், 2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு நவம்பர் 16,17 மற்றும் நவம்பர் 23, 24 ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் உதவி வருவாய் அலுவலர் தாமோதரன் மற்றும் மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments