திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் உணவு வணிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் பதிவு / உரிமம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 112 உணவு வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் தடுப்பூசி போடும் நிகழ்வு, 11 உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையில் பதிவு/ உரிமம் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையேற்று துவங்கி வைத்தார்.
இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கமால், பொருளாளர் அருண் பாலாஜி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ஜெசிமா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் வசந்தன் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments