மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஊரடங்கு காலகட்டத்தில் பொது மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அவர்களின் அவசர தேவையான மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் மொத்தம் உள்ள 131 காவல் சோதனைச் சாவடிகளிலும் பொதுமக்கள் உதவி கேட்டு தொடர்பு கொள்வதற்கு வசதி செய்யப்பட்டது.
அந்தந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் தொலைபேசி எண்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய தகவல் பலகை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.கடந்த 10 தினங்களில் பொதுமக்களிடம் இருந்து உதவிகேட்டு மாவட்ட காவல் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 125 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு அந்த அழைப்புகள் அனைத்தின் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்திலிருந்து 41 அழைப்புகளும் அதனைத் தொடர்ந்து 23 அழைப்புகள் திருச்சி மாவட்டத்திலும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது ஊரடங்கு காலகட்டத்தில் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ள மாவட்ட பொரோனோ கட்டுப்பாட்டு அறையை உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments