Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருகைக்கல் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இல்லத்திலேயே இலவச நூலகம், புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்தி வருகிறார். மேலும் ஆதரவற்ற அனாதை பிரதேங்களை குடும்பத்துடன் நல்லடக்கம் செய்து வருகிறார். புழங்குப்பொருட்கள் காட்சியகத்தில் திருகைகல் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

பழங்காலத்தில் பயிறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பாக்குவதற்கு பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல்லினாலான சாதனம் தான் திருகைக்கல். வட்டவடிவ கற்களின் மேற்பகுதியில் தானியங்களை சிறிது சிறிதாக உள்நுழைப்பதற்கு ஏற்ற வகையில் நடுவில் சற்று அகண்ட ஒரு துளை இருக்கும். அப் பகுதியிலேயே அரைக்கக்கூடிய பயறு உள்ளிட்ட தானியங்களை இடுவார்கள்.

 கீழ்ப்பகுதி கல்லின் மையத்தில் ஒரு துளை அமைந்திருந்கும். கல்லின் நடுவில் அமைந்திருக்கும் துளையானது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம் திருகையின் இரண்டு வட்டவடிவ கல் பாகங்களையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

திருகையின் மேற்பகுதியை இலகுவாகக் சுழற்றுவதற்கு ஏற்றவகையில் இரும்புத்துண்டால் அல்லது மரக்கட்டையால் ஆன தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

திருகையின் மேற்பகுதியை ஓரிரு தடவைகள் சுழற்றினால் தானியங்களை பருப்பாக மாற்றலாம் மாவாக்கவிரும்பின் பலதடவைகள் சுழற்ற வேண்டும். மேல் நடுப்பகுதியில் உள்ள துனையின் ஊடாக இடப்படும் தானியங்கள் சுழற்றும் போது அரைபட்டு இரு பாகங்களுக்கும் இடைப்பட்ட விளிம்பின் ஊடாக வெளியேறும். இதை சேகரிப்பதற்காக திருகையின் கீழ் விரிப்பான் வைக்கப்படும். அரைபட்ட தானியங்கள் விரிக்கப்பட்ட விரிப்பானில் சேகரிக்கப்படும்.அரைக்கப்படும் தன்மையை நன்றாக பேணுவதற்காக திரிகையில் பயன்படும் வட்டவடிவ கருங்கல்லில் இரும்பு உலோக உளியால் சிறு சிறு பொழிவுகள் செய்து கொள்வார்கள்.பழங்காலத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் திருகைக்கல் அவசியம் இருக்கும் நவநாகரீக காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக்ஸி வந்த காரணத்தினால் திருகைக்கல் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது.இன்றைய தலைமுறையினர் திருகை கல் குறித்த தகவல் பெரும்பாலானோர்க்கு தெரிவது அரிதாகிப் போய்விட்டது. நம் வரலாறு நமது கலாச்சாரம் நமது பெருமை என்றார் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

 https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *