Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் ஆற்றிய உரை

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கி ஆற்றிய உரை. இன்று திறக்கப்பட்ட 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 ஏக்கர் பரப்பளவில் அண்ணா கனரக வாகன சரக்கு முனையம்,

 இன்று அடிக்கல் நாட்டப்பட்ட 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 ஏக்கர் பரப்பளவில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி, 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் 18 கூடிய 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பறவைகள் பூங்கா 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமி மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம்

 4 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சைமலை சுற்றுலா திட்டம் மிகவும் முக்கியமான திட்டம். இந்த திருச்சி மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் என்னால் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த தொழில் பூங்காவில் உலகில் முன்னணி நிறுவனங்களான ஐபிஎல் பெப்சிகோ தொழில்துவங்க உள்ளனர். இதன் மூலம் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.400 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பூங்கா என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 இப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 26 ஆயிரத்து 666 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா திட்டங்கள் திருச்சிக்காக மட்டும் தரப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வாங்குகின்ற சகோதரிகள் 4,424 பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று உயர்கல்வி உறுதி செய்யப்பட்ட புதுமைப்பெண் மாணவிகள் 34784 பேர் காலை உணவு திட்டத்தின் கீழ் 86 ஆயிரம் பிள்ளைகள் சூடான சுவையான சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.

 70 ஆயிரத்து 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நாலாயிரத்தி 160 கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது 991 கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவியை வழங்கியிருக்கிறோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம் 54,428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

 நான்கு   ஆண்டுகள் ஆட்சிக்கு வந்து நிறைவடைந்து இருக்கிறது ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு வந்திருக்கிறோம். ஐந்தாம் ஆண்டு துவங்கிய திருச்சி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களை சந்தித்து பேசினேன் இந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்திருக்கின்ற முக்கியமான சாதனைகளை அதனால் தமிழ்நாடு அடைந்து இருக்கக்கூடிய வளர்ச்சியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்

அப்படி சொல்லும் போது எனக்கே ஒரு நொடி வியப்பாக இருந்தது ஒரு உதாரணத்திற்கு பெரிய நகரங்களில் செய்திருக்கின்ற முக்கிய கட்டமைப்பு திட்டங்களை மட்டும் சொல்கின்றேன் மதுரையில் ஒற்றை செங்களுடன் நின்ற எய்ம்ஸ் போல் இல்லாமல் சொன்ன தேதிக்கு முன்பே சென்னையில் கட்டி முடித்த ஆறு லட்சம் மக்களுக்கு மேல் பயனடைந்து வருகின்ற கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கலைஞர் நூற்றாண்டு பூங்கா கோவைக்கு செம்மொழிப் பூங்கா டைடல் பார்க் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பூங்கா பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கிக் கொண்டே வருகிறோம்.

அதேபோல் கல்வி எடுத்துக் கொண்டால் புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் நான் முதல்வன் போன்ற நம்முடைய புரட்சித் திட்டங்கள் காரணமாக உயர்கல்வி கல்வியில் சேருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது அதுவும் இந்தியாவின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிக மருத்துவத்துறை எடுத்துக் கொண்டால் நம்முடைய தொலைநோக்கு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஐநா விருதையும் பெற்றிருக்கிறோம் நகரங்களை மட்டுமல்ல கிராமங்களிலும் வளர்ந்திருக்கிறோம்..

நான்கு ஆண்டுகளில் சரிவிழிந்து நம்பர் ஒன் மாநிலமாகி சாதனை படைத்தோம் இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள் அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்.அது நடந்தேற தொடரட்டும் நமது திராவிட மாடல் ஆட்சி. பல்லாண்டு என்று நாங்கள்  உங்களோடு இருப்போம். என்று நீங்கள் எங்களோடு இருக்க வேண்டும்.என்று  பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *