Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இலங்கை சுண்டைகாய் நாடு -கட்சத்தீவை மீட்போம் திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

திமுக கூட்டணி சார்பில், திருச்சி லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது….

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருப்பதாக, அவர்கள் தான் கூறிக் கொள்கின்றனர். உண்மையில் இந்தியா கூட்டணிக்கு தான் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை வெற்றி வாய்ப்பு உள்ளது. இலங்கை அரசு ஒரு இனத்தை அழித்துவிட்ட அகங்காரத்தில் பேசி கொண்டிருக்கிறது. அன்றைய நெருக்கடியான சூழலில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது. அப்போதே திமுக சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இந்தியாவின் ஒரு பிடி மண்ணை கூட இலங்கைக்கு விட்டு தர மாட்டோம். நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்க, முதல்வருடன் சேர்ந்து முயற்சி எடுக்கப்படும்.

 மதிமுகவின் தனித்தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்காக, சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என்று முதல்வரிடம் பேசிவிட்டு, முடிவு செய்தோம். ஏற்கனவே போட்டியிட்ட பம்பரம் சின்னம் கிடைக்காததால் தீப்பெட்டி சின்னத்தை பெற்று அதில் போட்டியிடுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெல் தொழிற்துறை நலிவில் இருந்து நீங்க நடவடிக்கை எடுப்போம்.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் – ஸ்ரீரங்கத்தில் கொண்டு வரப்படும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டனி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகிறது.இலங்கைஒரு சுண்டைக்காய் நாடு – இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பேச்சுக்கு வைகோ பதிலளித்த போது…தமிழ் இனத்தின் முதல் எதிரி டக்ளஸ் தேவானந்தா தான் என்றார்.

 திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மதிமுகவிற்காக உழைத்து வருகின்றனர் – கூட்டணியான எங்களுக்குக்காக – அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனிச் சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனாம் தான் தீப்பெட்டியை தேர்தெடுத்தோம்.

தேர்தல் ஆனையம்

மோசடி செய்து விட்டது – சின்னம் ஒதுக்குவதில்…

5.9 சதவீதம் இருந்தாலே 6 ஆக எடுத்து கொள்ள வேண்டும் – ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டு விட்டது.

74 மதிமுக தேர்தல் அறிக்கையில்

சுயாட்சியும் கூட்டாட்சியும், மதசார்பின்மை ,சமூக நீதி ,தமிழ் ஆட்சி மொழி தமிழ் செம்மொழி தேசிய நூலாக திருக்குறளை அறிவித்திடுக, மொழி திணிப்பை எதிர்ப்போம், கல்வி உயர்கல்வி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு ,நதிநீர் இணைப்பு ,அணை பாதுகாப்பு மசோதா, சேது கால்வாய் திட்டம், தமிழ்நாட்டில் கனிம வள ஏலம் ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி நீக்கம், சாலை வரி, பத்திரிக்கையாளர் நலன் ,மின்சாரத்திற்குச் சட்ட முன்னறிவிப்பு 2022 திரும்பப் பெறுதல், ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தர தடை, ராமநாதபுரம் அரியலூர் மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு தமிழ் ஈழமே தீர்வு விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம், புதுவை மாநில அந்தஸ்து.சேலம் சென்னை எட்டு வழி திட்டத்திற்கு மதிமுக தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *