திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாலையூர் ஊராட்சி ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிகமாக முறைகேடுகள் நடைபெறுவதாக அக்கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வேலை செய்யும் நாட்களில் பணியாளர்களின் அட்டையை வாங்கிக்கொண்டு வேலைக்கு வருகை தந்த மாதிரி பதிவு செய்கின்றன. ஆனால் நிறைய பேர் வேலைக்கு வருவதில்லை.
ஒரு அட்டைக்கு பாதிக்குப் பாதி லஞ்சம் வாங்குகின்றனர். இதனை எவரும் கண்டுகொள்வதில்லை. இதனை பணித்தள பொறுப்பாளர் ஜெயலட்சுமியிடம் சுபாஷினி என்ற பெண் கேட்டுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி தனது கணவரை வைத்து மிரட்டியுள்ளார். ஜெயலெட்சுமியின் கணவர் சுபாஷினியை தகாத வார்த்தையில் பேசுயுள்ளார். இதற்கு உடந்தையாக வார்டு உறுப்பினர், தலைவர் , கிராம செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் அனைவரும் உடந்தையாக இருக்கின்றனர்.
தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணித்தள பொறுப்பாளர் ஜெயலட்சுமி அதிகமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் அவரை பணிநீக்கம் செய்து தகுதியான ஆட்களை பணி அமர்த்த அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments