Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அமைதிப்படை அமாவாசை நான் அமைச்சரிடம் பேசிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி  அமைப்பது குறித்த மத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான நேரு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி  பேசிய போது…..இன்னும் நூறாண்டு காலத்திற்கு திமுக ஆட்சி தான் நடக்கும் நடக்கப்போகிறது என்று பேசினார் .அப்போது மேடையில் அமர்ந்திருந்த திமுக முதன்மை செயலாளர் அமைச்சருமான நேரு அப்புறம் …என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் சிரிப்பலைகளால் அரங்கு அதிர்ந்தது. பின்னர் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீண்டும் மைக்கை வாங்கிய அமைச்சர் நேரு உனக்கு சீட்டு கேட்ப  அப்புறம் உன் மகனுக்கு உன் பேரனுக்கு வரிசையாக சீட்டுக்கு  கேட்டுக்கிட்டே இருப்ப அப்படின்னு நகைச்சுவையாக பேசினார் .

மீண்டும் பேச்சை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அண்ணன் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மகேஸ் உள்ளார். அவருக்கு முன் அன்பில் பெரியசாமி உள்ளார் என அவர் வாரிசுகளை பற்றி பேசிய போது அதற்கு நேரு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்காங்கன்னு தெரியுமா உனக்கு என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். நாங்களும் அமைதிப்படை அமாவாசை போல் டிரவுசர் போட்டுக் கொண்டு வந்து விடுவோம் என மீண்டும் பேசினார். இதனால் இந்த இரண்டு நிமிடமும் செயல்வீரர் கூட்டம் சிரிப்பலையில் சத்தத்துடன் காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *