திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று (24.05.2023) புதன் கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.இரவிச்சந்திரன்,
கோயில் மேலாளர் தமிழ்செல்வி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மீனாட்சி, உதவி கண்காணிப்பாளர்கள் மோகன், அண்ணாதுரை, பழனிச்சாமி, ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி,
பாஸ்கரன், பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல் எண்ணும் பணி Srirangam temple youtube-ல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று (24.05.2023) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 66,05011 ரொக்கம், 201 கிராம் தங்கம், 1452 கிராம் வெள்ளி மற்றும் 241 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் வரப் பெற்றுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
389
24 May, 2023










Comments