திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களுர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டியூட் சயின்ஸ் & டெக்னாலஜி புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா எஸ்.ஆர். எம் நிறுவனங்கள் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் ஆலோசகர் மற்றும் விஞ்ஞானி – ஜி அலுவலகம் டாக்டர் ப்ரீத்தி பன்சால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
SSC NASSC0M – வியூகம் மற்றும் செயல்பாடுகள் தலைவர் உப்மித் சிங் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டியூட் சயின்ஸ் டெக்னாலஜி தலைவரும், எஸ்.ஆர்.எம் நிறுவனங்கள் திருச்சி, ராமாபுரம் வளாக துணை தலைவர் நிரஞ்சன்,
எஸ்.ஆர்.எம் திருச்சி ராமாபுரம் வளாக தலைமை இயக்குனர் டாக்டர் என். சேதுராமன் மற்றும் எஸ்.ஆர்.எம். திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால் முருகன் மற்றும் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments