வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியின் சமுதாய அரங்கத்தில் நடைபெற்றது.
தேசிய ஒருங்கிணைப்பாளர் கிளாராம்மால் வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்பின் அமலா வளர்மதி மாநாட்டின் சாராம்சம் குறித்து விளக்கினார். சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இம்மாநாட்டில் தொழிலாளர் நல அலுவலர், தேசிய மற்றும் மாநில வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பானது வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்காக நடத்திய மாநாடு சி 189-க்கு மத்திய அரசு உடனடியாக கையொப்பமிட்டு ஒப்பதல் வழங்க வேண்டும்.
வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அவர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் மத்திய சட்டம் மற்றும் மாநில சட்டத்தை கொண்டு வரவேண்டும். வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வேண்டும். ஒருநாள் வார விடுப்பு கொடுக்க வேண்டும்.
வீட்டுவேலைத் தொழிலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 குறைந்த பட்ச ஊதியமாக நிர்ணயம் செய்து சட்டமாற்றத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர். இந்த கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments