திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருடைய மனைவி பத்மாவதி இவர்களுடைய மகன் ஜெய ராஜேஷ். இவர் சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் நேற்று மருமகள் நந்தினி தேவி மற்றும் சிலர் மட்டும் காரில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு சாவியை போட்டு திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியவில்லை இதனால் சந்தேகமடைந்த வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கிருந்த பின்பக்க கதவு தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக நந்தினி தேவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த அமர்வு நீதிமன்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 50 பவுன் நகைகள், 25 ஆயிரம் பணம் கொள்ளை போனதாக முதற்கட்ட தகவல் கூறினர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் கீழே சிதறிக் கிடந்த துணிகளை எடுத்தபோது துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.
மேலும் மேஜையின் மீது வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் 10 பட்டு புடவைகள் மட்டும் திருடு போனதாக விசாரணையில் தெரியவந்தது. அதிர்ச்சியில் இருந்த போலீசார் சிறிது நிம்மதி அடைந்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments