திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் திருச்சி நீயூரோ ஒன் மருத்துவமனை மற்றும் மணப்பாறை லயன்ஸ் சங்கம், திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் 15 – வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 4 கி.மீ தூரமும்,15-வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 3 கி.மீ தூரமும்,15- வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 6 கி.மீ தூரமும்,15 – வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் பந்தய இலக்காக வைக்கப்பட்டு மாராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் முதல் 6 – இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசு – சான்றிதழும் போட்டியில் கலந்து கொண்டஅனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments