திருச்சியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், இந்த மழை தற்பொழுது குளிர்ந்த சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பெரும்பாலான பகுதிகள் பலத்த காற்றுடன் மழை தூறியது. இதில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் வீசிய பலற்றுக்காற்றின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் விழுந்ததில் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றின் மீது மரம் இருந்து கடை சேதமடைந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments