திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் சூசையப்பர் கோயில் தெருவைச் சேர்ந்த கஸ்பர்ராஜ் மகன் ஆண்டோ (18). லால்குடி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 முடித்து விட்டு , மேல் படிப்பிற்காக கல்லூரியில் சேர இருந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆண்டோ ஆழமான பகுதிக்கு சென்று, குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
அவருடன் குளித்துக் கொண்டிருந்த சக நண்பர்கள், ஆண்டோ பெற்றோரிடம் கூறியதன் அடிப்படையில் லால்குடி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனை தண்ணீரில் தேடினர். இரவு நேரம் என்பதால் மாணவனின் உடலை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் மாணவனை தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டனர். மாணவனின் சடலத்தை கைப்பற்றிய லால்குடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments