Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில், மாணவியர் விடுதி 6, மாணவர் விடுதி 5, தொழில் நுட்ப கல்லூரி மாணவர் விடுதி 1,தொழில் பயிற்சி மாணவர் விடுதி 1, மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி 1 ஆக மொத்தம் 14 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக்/ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பி.வ/மி.பி.வ/சீம விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் மாணவ/மாணவியர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும், இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 20.08.2022-க்குள்ளும் சமர்பிக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, கல்லூரி மாணவ-மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *