சாரநாதன் பொறியியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான முகாமை நடத்தியது. இதில் கல்லூரி செயலாளர் எஸ்.ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி இந்த முகாம் நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் டி.வளவன் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 67க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சில்குமார் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments