திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியில் உள்ள உப்பிலியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்புறநாடு ஊராட்சியில் 13 கிராமங்களில் உள்ளன. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.
இவர்களுக்காக தினசரி காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அரசு பேருந்து வந்து செல்கின்றன. இந்த நிலையில் போக்குவரத்து நிர்வாகம் திடீரென நேரத்தை மாற்றியது. இதனால் 8 கிலோமீட்டர் வரை மாணவ, மாணவிகள் நடந்து செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது. காலை நச்சிலிப்பட்டி கிராமத்தில் மாணவ மாணவிகள் அரசு பேருந்தை சிறை பிடித்தனர்.
போராட்டத்தில் வழக்கமான நேரத்திலேயே அரசு பேருந்தை இயக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பள்ளி மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலதிகாரியிடம் தெரிவித்து வழக்கம் போல் பேருந்தை இயக்க வலியுறுத்துவதாக தெரிவித்தவுடன் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நச்சிலிபட்டியில் இருந்து டாப் செங்காட்டுப்பட்டிக்கு 8 கிலோமீட்டர் தொலைவு உள்ளது.
காலை மாலை வரக்கூடிய அரசு பேருந்து ஒன்று மட்டுமே உள்ளது. காலை 8 மணிக்கு வரக்கூடிய பேருந்து தற்பொழுது 9:00 மணிக்கு வருவதாகவும் மாலை நேரத்தில் ஐந்து மணிக்கு வர வேண்டிய பேருந்து 6 மணிக்கு வருவதாகவும் அப்பகுதி மக்களும் மாணவர்களும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வரை பேருந்து நச்சிலிபட்டியிலேயே நின்று கொண்டிருக்கிறது. அதிகாரிகள் மற்றவர்கள் யாரும் வந்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை யாரும் வரவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments