Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிப்போர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்!

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), ஐஐஐடி (IIIT), என்ஐடி (NIT) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (CENTRAL UNIVERSITIES) பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு 2020-2021ஆம் ஆண்டிற்கான புதியது (FRESH) கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி (IT), ஐஐஎம் (IIM), ஐஐஐடி (IIT), என்ஐடி (NIT) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (CENTRAL UNIVERSITIES) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .2.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ .2.00 இலட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ/ மாணவியர்களுக்கு 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்கள்.

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி

மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ .2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Advertisement

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது (FRESH) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மேற்படி கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமாப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 04.01.2021 முதல் 15.02.20201 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,

எழிலகம் இணைப்பு கட்டடம்,

2-வது தளம், சேப்பாக்கம் சென்னை -5

தொலைபேசி எண், 044-28551462

மின்னஞ்சல் முகவரி: tngovtlltscholarship@gmail.com

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *