Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் குப்பைகளைக் கொட்டி தூய்மை செய்வது போல் போட்டோ போஸ் கொடுத்த மாணவர்கள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் என்று அழைக்கப்படும் எறும்பீஸ்வரர் ஆலயத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளை நிற சட்டையும், கருப்பு பேண்ட் அணிந்து சீருடையில் வந்த மாநில உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதில் ஒரு சில மாணவர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆங்காங்கே கிடைக்கக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், காகித குப்பைகள் ஆகியவற்றை சேகரித்து பரவலாக பரப்பி அதனை தூய்மை செய்வது போல போட்டோவும், வீடியோவும் எடுத்துக் கொண்டனர்.

உலக சுற்றுலா தினத்தை சுற்றுலா தினங்களை தூய்மைப்படுத்துவதற்காகவே இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் செய்த செயல் ஏதோ கணக்கிற்கு வந்தது போல் அமைந்தது. மேலும் நாள் முழுக்க மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள் என்றிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சென்றவுடனே, மாணவர்களும் பேக் அப் ஆனார்கள்.

தெரு தெருவாய் கூட்டுவது பொதுநல தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலம் உண்டு என்ற எம்ஜிஆர் படத்தில் வரும் பாடலை ஞாபகப்படுத்தியது போல் உள்ளது என கோவிலுக்கு வந்த பக்தர்கள் புலம்பியபடி சென்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு கூறுகையில்…. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்தலங்களை தூய்மைப்படுத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக என்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பரவல் இல்லை இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தாலுகா ஆபீசில் உள்ள இ சேவை மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் தொகை வழங்கப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *