Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழ்துறை தலைவர், பேராசியர் மீது பாலியல் புகாரில் உண்மை தன்மை இருப்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் பேட்டி

திருச்சி புத்தூர் பகுதியில் ஆண் – பெண் இருபாலர் பயிலும் தனியார் கல்லூரி (பிஷப் ஹீபர் கல்லூரி) இயங்கி வருகிறது. இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் காலை மற்றும் மாலை வேலை என இரு பிரிவுகளாக நடைபெறும் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் பால்.சந்திரமோகன் வகுப்பில் மாணவிகளிடம் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசுவது, ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்கு உடந்தையாக உதவிப் பேராசிரியர் நளினி சுந்தரி என்பவர் செயல்பட்டு வந்ததாகவும், இதனால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், மன உளைச்சலால் அவதிப்படுவதுடன் பெற்றோர்களும் கல்லூரிக்கு அனுப்ப அச்சப்படுவதாக முதலாமாண்டு மாணவிகள் தமிழ் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தொடர்பாக 5 பக்க புகார் கடிதம் கல்லூரி முதல்வருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் இது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் மீது விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் தொடர்பான விவகாரங்கள் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பிரபல கல்லூரியில் மாணவிகள் எழுதிய இந்த கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளதால், பலர் கேள்வி எழுப்பிய நிலையில் கடந்த 30-ம்தேதியன்று துறை தலைவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விரைவில் கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி தமிமுனிஷா கூறுகையில்… இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறையின் கீழ் மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டது என்றும், மாணவிகளை இன்று நேரில் சந்தித்து விசாரணைக்குப் பிறகு முழுமையான அறிக்கை வழங்கப்படும்.

கல்லூரி அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாணவிகளை சந்தித்தபிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவிகள் எழுத்துபூர்வமாக அளித்த புகார் சரிபார்த்ததில் அளிக்கப்பட்ட புகார் உண்மை என தெரியவந்துள்ளது. எனவே மாணவிகள் விருப்பபட்டால் புகார் அளிக்கலாம், விருப்பமில்லாதபட்சத்தில் உண்மை தண்மையிருப்பின், மாணவிகள் நலன், வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள பட்சத்தில் மாவட்ட சமூகநல அலுவலரான என் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *