Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறந்த பள்ளி விருது பெறும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி !!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறந்த பள்ளிக்கான சுழற்கேடயம் விருது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

தொடக்க கல்வித்துறையின் கீழ் சிறப்பாக செயல்படும், குறிப்பாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க செய்வது, மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இணைந்து அந்தந்த பள்ளிக்கான வளர்ச்சி பணிகளில் ஈடுபடுதலுடன், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுடன் பல்வேறு பள்ளிகளின் முன்னேற்ற செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து கொண்டிருக்கும் தொடக்கபள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை அங்கீகரிக்க இந்த விருது வழங்கப்படும்.

இந்த நிலையில் திருச்சி மாநகரில் உள்ள தென்னூர் பகுதியில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளிக்கும் இந்த சுழற்கேடயம் விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியருடன் பேசுகையில்…. இந்த பள்ளி சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, கிட்டத்தட்ட 90 மேலாக செயல்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு இந்த பள்ளியில் நான் பதவியேற்றேன்.

அப்போது மாணவர்களின் எண்ணிக்கை 70ஆக இருந்தது, கடந்த 10 வருடங்களில் இந்த எண்ணிக்கை தற்போது 200ஆக அதிகரித்துள்ளது. இதற்கு பள்ளியில் மேம்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம், கற்றல் கற்பித்தலை பொறுத்தவரை அனைத்து வகுப்பறையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது, சிலம்பம், யோகா, நடனம், அபாகஸ் என சிறப்பு வகுப்புகள் செயல்படுத்தப்படுகிறது.

இதனை தவிர செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு என அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு உருவாக்கியது, உள்ளூர் நூலகத்தில் மாணவர்களை உறுப்பினராக்கியது என வசதிகளும், வீட்டிலிருந்து அனைத்து மாணவர்களும் தினமும் ஏதேனும் ஒரு காய் மட்டுமாது கொண்டுவர வேண்டும் என்ற ‘அட்சய பாத்திரம்’ திட்டமும், பொதுமக்களும், பெற்றோரும் காலை உணவிற்கு ஏதேனும் உணவு பொருளை கொடுக்கலாம் என்ற நோக்கில் பள்ளி வளாகத்தில் செய்லபடுத்தப்படும் ‘காலை உணவு வங்கி’ புதிது புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டங்களும் காரணமாக உள்ளது என்றார்.

தொடர்ந்து அரசு அதிகாரிகள் வந்து பள்ளியை ஆய்வு செய்து சென்றதிற்கு பின் தற்போது விருது கிடைத்துள்ள செய்தி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *