திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் அனைத்து பேருந்துகள் நின்ற செல்ல வேண்டும் என இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்த மனுவில்… திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் மக்கள் வந்து செல்ல வசதியாகவும், காவல்நிலையம் மற்றும் விவசாய பண்னைக்கு வரும் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாகவும்
வண்ணாங்கோவில் பேருந்து நிறுத்தத்தில் திருச்சி – மணப்பாறை, திண்டுக்கல் செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும், அதே போன்று இனாம்குளத்தூர் செல்லும் நகர பேருந்தினை நவலூர்குட்டபட்டு கிராமத்தினுள் சென்று வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
Comments