Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 வயது குழந்தைக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை

தென் தமிழ்நாட்டிலும் மற்றும் திருச்சியிலும் சிறு வயது குழந்தைக்கு நடைபெற்ற முதல் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை தனது குழந்தைக்கு புதிய வாழ்க்கையை தந்து அதன் மூலம் அக்குழந்தையின் 2வது பிறந்தநாளை கொண்டாடும் அன்பார்ந்த தாய் 10 கிகி-க்கும் குறைவான எடை கொண்ட இக்குழந்தை, யூரியா சுழற்சி சீர்கேடினால் ஏற்பட்ட வலிப்புத் தாக்கத்தோடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. திருச்சி, 11 ஜனவரி 2022: தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு சிகிச்சை சங்கிலி தொடர் நிறுவனங்களுள் முன்னணி வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை, திருச்சி, சிட்ருல்லினீமியா (யூரியா சுழற்சி சீர்கேடு) என அழைக்கப்படுகிறது. ஒரு மரபியல் பாதிப்புள்ள ஒரு பச்சிளங் குழந்தைக்கு வெற்றிகரமான சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்திருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.

ரஃபீதா பாத்திமா என்ற 2 வயதே ஆன ஒரு பெண் குழந்தை, வலிப்புத் தாக்கம் மற்றும் தீவிரமான வாந்தியெடுத்தல் பிரச்சனையோடு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. எண்டோஸ்கோப்பி மற்றும் சிடி ஸ்கேன் உட்பட இக்குழந்தைக்கு செய்யப்பட்ட பல பரிசோதனைகளில் இப்பாதிப்புக்கான காரணம் துல்லியமாக அறியப்படவில்லை.

அதனால், இதற்கும் கூடுதலாக செய்யப்பட்ட மதிப்பீட்டு செயல்முறைகளும் மற்றும் மரபியல் பரிசோதனையும், இக்குழந்தைக்கு சிட்ருல்லினீமியா (யூரியா சுழற்சி சீர்கேடு) என்ற காரணத்தை கண்டறிவதற்கு வழிவகுத்தது. அமோனியா (மிகை அமோனியா) மற்றும் பிற நச்சு பொருட்கள் உடலில் சேர்வதை இது விளைவிக்கிறது. காவேரி மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்புமாற்று மையத்திலுள்ள மருத்துவ நிபுணர்கள் குழு, இக்குழந்தையின் பாதிப்பு நிலையை குணப்படுத்த கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இப்பச்சிளங் குழந்தையின் தாயான சபானா பர்வீன், கல்லீரல் தானமளிக்க முன்வந்தார். காவேரி குழும மருத்துவமனைகளின் கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை

துறையின் தலைவர் டாக்டர் இளங்குமரன் கே. மற்றும் அவரது வழிகாட்டலின் கீழ் இயங்கும் அனுபவமிக்க மருத்துவர்கள் குழுவால் இக்குழந்தைக்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் உடல் எடை மற்றும் அளவுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில், தாயின் கல்லீரலின் இடதுபக்கத்திலிருந்து ஒரு பகுதி அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். இளங்குமரன் இந்த உறுப்புமாற்று சிகிச்சை குறித்து பேசுகையில்,.. குழந்தையின் உடல் எடை வெறும் 9 கிலோ என இருந்த நிலையில், பல அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்ததால் உண்மையிலேயே மிகவும் சிக்கலான குழலாக இது இருந்தது. பூயூரியா சுழற்சி சீர்கேடு ஒரு மரபியல் பாதிப்பு நிலையாகும். பிறப்பின்போது இப்பாதிப்பு இருப்பது வழக்கமாக தவறவிடப்படக்கூடியதாகும் புதிதாக பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் பல நேரங்களில் கண்டறியப்படுகின்றன. ஆனால், அரிதாகவே மரபியல் குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. குறிப்பிட்ட இந்த மரபியல் சீர்கேடு தோன்றுவது வாழ்க்கையின் பிந்தைய நிலைகளில், எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி எதேச்சை முறையில் நிகழக்கூடும். இந்த குழந்தையை பொறுத்தவரை அது ஆறு மாத வயதில் இந்த நோய் தாக்குதல் வெளிப்பட்டது. 

ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகே இதற்கு காரணமான நோய் சரியாக கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. இன்னும் சில மாதங்கள் தாமதம் இதில் ஏற்பட்டிருக்குமானால், குழந்தையின் இரத்தத்தில் அமோனியா அளவுகள் மிகவும் அதிகரித்து மூளையில் சேதத்தை விளைவித்திருக்கும் மற்றும் அதன் பின்விளைவாக அது கோமா (உணர்விழப்பு) நிலைக்கு கொண்டு சென்றிருக்கும். இக்குழந்தையின் தாய், தனது குழந்தைக்கு கல்லீரலை தானமளிக்க மனமுவந்து முன்வந்தார்.” என்று கூறினார்.

இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததனால் உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பிறகு உடனடியாகவே இக்குழந்தையின் கல்லீரல் செயல்படத் தொடங்கியது. காவேரி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை துறையின் நிபுணர் மருத்துவர் குமரகுருபரன் எஸ் அவர்கள் கூறியதாவது: ‘வளர்சிதை மாற்ற கல்லீரல் கோளாறுகள், குழந்தை பருவ கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்கான இரண்டாவது மிகப் பொதுவான சுட்டிக்காட்டல் அம்சங்களாக இருக்கின்றன. வளர்சிதை மாற்ற கல்லீரல் நோயுள்ள பல குழந்தைகள், அந்நோய் பாதிப்பு அறியப்படாமலேயே இருக்கின்றன. நாம் பார்ப்பது மிகவும் குறைவான அளவு மட்டுமே கடந்த காலத்தில் இறுதி நிலை கல்லீரல் நோயுள்ள குழந்தைகளுக்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை என்பது அரிதாகவே இருந்தது. இப்போது சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களினால் இறுதிநிலை கல்லீரல் நோயுள்ள எந்தவொரு குழந்தையும் உறுப்புமாற்று சிகிச்சை கிடைப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. 

காவேரி மருத்துவமனையின், குழந்தை மருத்துவவியல் துறையின் தலைவரும், இம்மருத்துவமனையின் இணை-நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் D. செங்குட்டுவன இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சை குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்த சவாலை துணிவுடன் எதிர்கொண்டதற்காகவும், குழந்தை நோயாளியையும் தானமளித்த தாயையும் மிகுந்த கவனத்தோடு கையாண்டதற்காகவும் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காகவும் டாக்டர். இளங்குமரன், டாக்டர் குமரகுருபரன் மற்றும் அவர்களது திறன்மிக்க குழுவினரையும் நாங்கள் மனமார பாராட்டுகிறோம். இத்தகைய அதிக சிக்கலான செயல்முறையில் உறுப்புமாற்று சிகிச்சை நிபுணர் மற்றும் அவரது குழுவினரின் நிபுணத்துவம் மிக முக்கியம் அதிக தகுதிவாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்களின் குழுவை கொண்டிருப்பது நாங்கள் செய்த அதிர்ஷ்டம். பல்வேறு உணர்வுகள் நிறைந்ததாகவே அந்த சூழல் சேர்ந்தது; எளிமையான பின்னணியை கொண்ட இக்குடும்பத்தினர், வேறொரு தனியார்துறை மருத்துவமனையில் கலந்தாலோசித்தபோது அவர்களுக்கு சொல்லப்பட்ட சிகிச்சை செலவுத்தொகை அவர்களால் செலுத்த முடியாத அளவிற்கு இருந்தது. அதன்பிறகு, எங்களை அணுகியபோது அனுதாபத்தோடும், புரிந்துணர்வோடும் இதை பரிசீலித்து தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் செயல்திட்ட அலுவலகத்திலிருந்து இந்த சிகிச்சை செலவிற்கான நிதியுதவியைப் பெற நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டினோம். 

எமது மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பங்களும், மருத்துவர்களின் நிபுணத்துவமும், நல்ல உடல் ஆரோக்கியம் இக்குழுந்தைக்கு கிடைப்பதை உறுதிசெய்ததன் மூலம் இந்த சிகிச்சையின் வெற்றியை சாத்தியமாக்கியது. தனது குழந்தை மீது அதன் தாய் கொண்டிருந்த வலுவான அன்பையும் நாங்கள் நேரில் காண வாய்ப்பு கிடைத்தது; குடும்பத்தினரின் பல ஆட்சேபணைகளையும் மீறி, கல்லீரலை தானமாக வழங்க இக்குழந்தையின் தாய் முன்வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை காலத்தின்போது இங்குள்ள பணியாளர்களிடமும் இக்குழந்தை நேசத்தோடு ஒட்டிக்கொண்டது. மொத்தத்தில் எமது மருத்துவ சிகிச்சை குழுவினருக்கு இதுவொரு மனநிறைவு அளிக்கும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *