திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் சந்தையானது திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வார சந்தையாக அமைந்துள்ளது. இங்கு வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும்.
 இதில் தம்மம்பட்டி, பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், முசிறி, திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு இங்கு வருவது வழக்கம்.
இதில் தம்மம்பட்டி, பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், முசிறி, திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு இங்கு வருவது வழக்கம். 
 ஏனென்றால் கொல்லிமலையில் விளைகின்ற சீரகம், முந்திரி மற்றும் மா, பலா போன்ற மலைகளில் விளைகின்ற தங்கள் விலை பொருள்களை மலைவாழ் மக்கள் இங்கு வந்து சந்தைப்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது சந்தையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதியோ, சுத்தமான குடிநீர் வசதியோ இங்கு பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

 மேலும் இங்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய புளிய மரங்கள் மற்றும் வேப்ப மரங்களை அரசு பதிவேட்டில் வருவாய் துறையினர் ஏற்றாமல் இருப்பதால் சமூக விரோதிகள் இங்கு உள்ள மரங்களை வெட்டி செல்கின்றனர். இதனால் சமூக ஆர்வலர்கள் சந்தையை பராமரித்து மரங்களை அரசு பதிவேட்டில் (2C) ஏற்ற வேண்டும் என்றும்,

 வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

                                             13 Jun, 2025
                            13 Jun, 2025                           384
384                           
                                             
         07 May, 2023
 07 May, 2023
            
Comments