திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பொது தரிசனம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (32) என்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அருகிலிருந்தவர் மோகன்ராஜை எழுப்பியும், தண்ணீர் தெளித்தும் கண் விழிக்கவில்லை. இதனையடுத்து உடனடியாக மயங்கி விழுந்த மோகன்ராஜை கோவில் வெளியே பக்தர்கள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் மோகன்ராஜ் இறந்ததை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் நாளை அதிகாலை சமயபுரம் கோவில் திறக்கப்படாது. பல்வேறு பூஜைகளுக்கு பிறகு காலை 9- மணிக்கு மேல் திறக்கப்படும் என தகவல். மோகன்ராஜ் உயிரிழந்தது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவிலினுள் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments