திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பிரிவு சாலையில் திண்டுக்கலிருந்து – திருச்சிக்கு மாருதி ஸ்விப்ட் காரை சென்று கொண்டிருந்த போது கார் தீடிரென்று ஓடும் காரிலிருந்து புகை வெளியேறியது, கண் இமைக்கும் நேரத்திற்குள் கார் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரியத் தொடங்கியது.
காற்று வேகமாக வீசிய நிலையில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது, பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ ஜுவாலையால் பொதுமக்கள் காரை நெருங்க முடியவில்லை. தீ விபத்தில் காரை ஓட்டி சென்ற கார் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் டிரைவர் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments