திருச்சி சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் உள்ள வீட்டு நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பிரியாணி கடையிலிருந்து ஒரு பெரிய அண்டாவில் பிரியாணியை ஏற்றிக் கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை அன்வர் அலி (55) என்பவர் ஓட்டிச்சென்றார்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, திடீரென்று கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து காரில் தீ பற்றி எரிய தொடங்கியது உடனே காரிலிருந்து ஓட்டுநர் கீழே இறங்கி விட்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய.முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments