திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சவேரியார் கோவில் தெருவில் வசிக்கும் லூர்துசாமி மகன் ஜோசப் நிக்சன் (55). இவர் 15 ஆண்டுகளாக கோத்தாரி சக்கரை ஆலையில் இருந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோசப் நிக்சன் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஜோசப் நிக்சன் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள், ஜோசப் நிக்சன் கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது ஜோசப் நிக்சன் கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்து.
உடனே அங்கிருந்து சகதொழிலாளர்கள் ஜோசப் நிக்சனை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவர்கள் ஜோசப் நிக்சனுக்கு சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோசப் நிக்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments