திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி பகுதியில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளனர் தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தங்களிடம் 40,000 கரும்புகளை கொள்முதல் செய்வதாக துறையூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கரும்பை பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்து விட்டு சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரியை தொடர்பு கொண்டு எப்பொழுது தங்களது கரும்பை கொள்முதல் செய்வீர்கள் என்று கேட்பதற்காக தொடர்பு கொள்ளும்போது அதிகாரிகள் விவசாயிகளின் தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. மேலும் விவசாயிகளின் கரும்பை கொள்முதல் செய்வதற்கு இன்னும் அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்று கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் கவலை அடைந்த விவசாயிகள் பொங்கல் ஒரு வார இடைவெளியில் தங்களால் இனி வெளி வியாபாரிகளுக்கு கரும்பை விற்க முடியாது சூழ்நிலையால் தங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படுவதாக தெரிவித்தனர். எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை காத்திட நடவடிக்கை எடுத்து தங்களது கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments