திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் வடக்கு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (70). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வெட்டிய கரும்பு வயலில் இருந்த தோகையை கொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு கொளுத்திவிட்ட தீயானது வெட்டாமல் இருக்கும் பக்கத்து கரும்பு வயலில் பரவியது. தீயின் அணைக்க சென்ற விவசாயி துரைசாமி தீயில் சிக்கிக் கொண்டு படுகாயமடைந்தார். இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments