Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில்  கோடைகால வசந்த உற்சவம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தின்போது கோடைக்கால வசந்த உற்சவம் நிகழ்ச்சி கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வசந்த உற்சவம் வைபவம் இன்று (18ம் தேதி) வெகுவிமரிசையாக தொடங்கியது.

9 நாட்கள் நடைபெறும்  வசந்த உற்சவதினத்தின் போது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சக்கரத்தாழ்வார் சன்னதியனருகே உள்ள வசந்த மண்டபம் எனப்படும் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அதன்படி வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை  நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு அலங்காரம் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டு அருளினார். அதனைத் தொடர்ந்து இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டுச் செல்லும் இந்த வசந்த உற்சவம் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி இவ்விழா நடைபெற்று வருகிறது.

வசந்த உற்சவத்தின் 9-ம் நாள் நிறைவு நாளான வரும் 26-ம் தேதி அன்று  ஏகவசந்தம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று நம் பெருமாள் ஆழ்வான் திருச்சுற்று வலம் வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளி திருமஞ்சனம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *