Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 13லட்சம் நிதியுதவி  -திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

திருச்சி மாநகரம், கேகேநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய சுமதி வயது 48, (பெ.த.கா. 964) க.பெ.நாகரெத்தினம் என்பவர் கடந்த 1997 2nd Batch-ல் காவல்துறைக்கு பணிக்கு தாக்கல் ஆகி, கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பான முறையில் காவல்துறையில் பணிபுரிந்து வந்தவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்தவர், 07.07.2022தேதி இயற்கை எய்தினார். இவருக்கு நாகரெத்தினம் என்ற கணவரும், ஹரிஷ் வயது 19 என்ற மகனும் வர்ஷா வயது 16 என்ற மகளும் உள்ளார்கள்.

மறைந்த தெய்வதிருமதி.சுமதி அவர்கள் உடன் கடந்த 1997 ஆண்டு காவல்துறை சேர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் சக காவல் ஆளிநர்கள் சுமார் 2572 காவலர்கள் ஒன்றுசேர்ந்து மறைந்த தெய்வதிருமதி.சுமதி அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ13,02,500/-லட்சம் நிதியை திரட்டினார்கள். அந்த நிதியை இன்று 17.10.22தேதி காலை 1200 மணிக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நிதியளிப்பு நிகழ்ச்சியில், ரூ 13,02,500/- தொகையை பிரிந்து ரூ.7லட்சத்தை மகள் வர்ஷா பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாகவும், மகன் ஹரிஷ் பெயரில் ரூ.3லட்சத்தை வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியும், மீதம் உள்ள ரூ.3,02,500/- தொகைய ரொக்கமாக கணவர் நாகரெத்தினத்திடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  அவர்களால் வழங்கி, 1997பேட்ச் காவல் ஆளிநர்களாகிய உங்களின் முயற்சியை பாராட்டுகிறேன்.

உங்களில் ஒருவருக்கு ஏதும் பிரச்சனை எனில் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவும் இந்த சிறப்பான செயல் என்றும் தொடரவேண்டும் என கூறினார்கள். நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக காவல் ஆளிநர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மறைந்த சுமதி அவர்கள் திருஉருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தி, காவல் ஆளிநர்கள் தங்கள் குடும்பத்தினரை மனதில் கொண்டு உடல்நலனில் மிகுந்த அக்கறைகாட்டி, ஆரோக்கியமாக வாழவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *