தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் கல்வியாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் இணைந்து பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்க மாநில தலைவருமான மதனா வரவேற்புரை வழங்கினார்.
மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் லீமாரோஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன்
உள்ளிட்டோர் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது வழங்கினார்கள்.
அனாதை பிரேதங்களைஆதரவற்ற பிரேதங்களை தொடர்ந்து நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு கலைஞர் விருதினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் வழங்கினார்.
இதுகுறித்து விஜயகுமார் பகிர்ந்து கொள்கையில், இவ்விருது இன்னும் சேவையை தொடர்வதற்கான ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். முடிந்தவரை மக்களுக்கு உதவிட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளேன் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments