கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் மூலமாக செயல்படுத்தபட்ட திட்டம் தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன் (SBM)). மத்திய அரசின் மூலம் 2014 அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளையும் உள்ளடக்கியது.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல், சுகாதாரமற்ற கழிப்பறைகளை ஃப்ளஷ் கழிப்பறைகளாக மாற்றுதல், கையால் சுத்தம் செய்தல், நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு இணை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சுகாதாரத்தை மேம்படுத்தி வரும் நிலையில்
இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் swachhata Hi seva 2024 என்ற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகராட்சியின் சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள மாணவர்கள் சாலையில் மனித சங்கிலி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments