உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ ஹாஸ்பிடல் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன அதில் ஒரு நிகழ்வாக நகரின் நான்கு முக்கிய இடங்களில் (பால் பண்ணை, மெகா ஸ்டார் தியேட்டர், ஹெட் போஸ்ட் ஆபீஸ், புத்தூர் நால் ரோடு) இதயம் குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட நோட்டீஸ்களை மக்களுக்கு வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக அப்பல்லோ ஹாஸ்பிடலில் இருதயம் தொடர்பான பரிசோதனைகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை மக்கள் இச்சலுகயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதய உருவிலான பெரிய உடைகளை அனிந்திருந்த நபர்கள் பலரின் கவனத்தையும் ஈரத்தை தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது. இதன்முலம் இதய சிகிச்சை தொடர்பான முக்கியத்துவத்தை இதில் வெளிப்படுத்தினர் பலரும் இதனை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments