Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று (16.03.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வளர்ச்சியை ஜனநாயகப்படுத்துதல் என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், ஆட்சி நிர்வாகமும் மக்களின் பொறுப்பும் என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது….. நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நண பெற்று வருகிறது. நமது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த (16.02.2023) அன்று ஜமால் முகமது கல்லூரியில் ஆபிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது இரண்டாம் கட்டமாக, இன்று (16.03.20023) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முக்கிய நோக்கயே, உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் பழமைவாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும்

தலைமுறையினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், தமிழர் பண்பாட்டில் கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வளரும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவதே நோக்கமாகும். உங்களுக்கு உணர்த்துவதால் நீங்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல நல்வாய்ப்பாக அமையும். மேலும், நமது பண்பாட்டின் உயர்ந்த தகவல்கள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும்.

இன்றைய நிகழ்ச்சியில் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்துதல் என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் திரு ஜெ. ஜெயரஞ்சன் அவர்களும், ஆட்சி நிர்வாகமும் மக்களின் பொறுப்பும் என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு தமிழர் பெருமிதம், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்கிடும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்புரை ஆற்றியவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்ட 20 மாணவ, மாணனிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி மற்றும் பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கல்விக்கடன் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களும், போட்டித் தேர்வு தொடர்பான நூல்களும், இணையதள தகவல்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்கள் கல்வி பயிலும் போதே தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான திறனை குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக

அரசு வழங்கும் முதலமைச்சரின் மாபெரும் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் தொடர்பான அரங்குகளும், மாணவர்களுக்கான திறன் பயிற்சி மற்றும் தாட்கோ சார்பில் அளிக்கப்படும் கல்வி உதவி தொடர்பான கண்காட்சி அரங்குகள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ம.செல்வம், பதிவாளர் கணேசன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) என்.செல்வம், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.செந்தில்குமார். தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்வரன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கா.பொ.ராஜேந்திரன். மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார். உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *