தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்ரேட்டர்களின் நலன் சார்ந்த தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மூன்றாம் அம்ச கோரிக்கைகளை முன்வைத்து
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட செயலாளர் விஷ்ணு வர்த்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வழங்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments